மணல் கடத்திய திருச்சி, மணப்பாறை ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளரான ஆரோக்கியசாமியின் டிப்பர் லாரிகள், ஜே.சி.பி.,யை பறிமுதல் செய்தனர் காவல்துறையினர். 3 ஓட்டுனர்களையும் கைது செய்தனர். ஆனால், அரசியல் அழுத்தத்தால் இன்ஸ்பெக்டர் அவற்றை விடுவித்தார். இது குறித்த புகார் டி.ஜி.பிக்கு சென்றது. இதனால், அந்த வாகனங்களை மீண்டும் பறிமுதல் செய்யவும் ஓட்டுனர்களை கைது செய்யவும் ஆரோக்கியசாமியின் இடத்துக்கு சென்ற பெண் டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டரை, உங்களால் முடிந்ததை பாருங்கள் என கூறிய ஆரோக்கியசாமி, அவர்களை நான்கு மணி நேரம் அலைக்கழித்துள்ளார். அமைச்சர் நேருவின் பெயரை சொல்லி மிரட்டியுள்ளார். மேலும், ஸ்ரீரங்கம் தி.மு.க எம்.எல்.ஏ., பழனியாண்டி இருதரப்புக்கும் பஞ்சாயத்து செய்துள்ளார். இதனையடுத்து இரண்டு பழைய வாகனங்களை மட்டுமே தர ஒப்புக்கொள்ளப்பட்டு வழக்கு மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.கவினரின் இந்த அடாவடி சம்பவம், மக்கள் மற்றும் காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பதவி ஏற்கும்போது கொடுத்த உறுதிமொழியின்படி, கட்சியினரின் இது போன்ற சட்டவிரோத செயல்களை, முதல்வர் ஸ்டாலின் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்’ என மக்கள், காவலர்கள், எதிர்கட்சியினர் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.