மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்ததை அடுத்து, தி.மு.க, இம்மாத இறுதியில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது நீட் தேர்வை ரத்து செய்ய அழுத்தம் கொடுக்க முனைந்து வருகிறது. இந்த விவகாரத்தை உரிய விளக்கங்களுடன் நாடாளுமன்றத்தில் எழுப்புமாறு தி.மு.க எம்.பி.க்களை கட்சித் தலைமை ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இம்மாதம் வெளியான நீட் தேர்வு முடிவுகள் இவர்களின் பொய்யான வாதங்களையும் கட்டுக் கதைகளையும் தவிடுபொடியாக்கி உள்ள நிலையிலும் அவர்கள் சுய ஆதாயம் கருதியே தொடர்ந்து இப்படி செயல்பட்டு வருகின்றனர்.