கள்ளச்சாராயம் காய்ச்சிய தி.மு.கவினர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மேலமணக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் என்பவர் அப்பகுதியின் தி.மு.க. வட்ட பிரதிநிதி. தி.மு.கவை சேர்ந்தவர் செல்வராஜ், இவர் ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக உள்ளார். இவர்கள் இருவரும் தங்கள் நண்பரான கணேசனுடன் சேர்ந்து அய்யப்பனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக பேராவூரணி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது, அங்கே 50 லிட்டர் அளவு கொண்ட பேரலில், 30 லிட்டர் சாராய ஊறலும், 100 லிட்டர் அளவு கொண்ட பானையில் 80 லிட்டர் ஊறலும், 10 லிட்டர் கொள்ளவு கொண்ட கேனில், 4 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.மேலும், அய்யப்பன், செல்வராஜ், கணேஷ் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ‘கள்ளச்சாராயம் தலைதூக்கக் கூடாது என்பதற்காகத்தான் டாஸ்மாக் திறக்கப்பட்டது’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் இதைகூறி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், தி.மு.க பிரமுகர்களே கள்ளச்சாராயம் காய்ச்சிய சம்பவம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.