தி.மு.க இடைத்தரகர்கள்

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள், ஆளும் கட்சியினர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி தாங்கள் டோக்கன் கொடுக்கும் விவசாயிகளிடம் மட்டும்தான் நெல் கொள்முதல் செய்யவேண்டும் என அதிகாரிகளை மிரட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பல விவசாயிகள் 20 நாட்கள் காத்திருந்தும் ஆளும் கட்சியினரின் கருணைப் பார்வை இல்லாததால் நெல்லை விறபனை செய்யமுடியாமல் துன்பப்படுகின்றனர். எனவே, தி.மு.க இடைத்தரகர்களை முதலமைச்சர் உடனடியாக கட்டுப்படுத்தி, அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும், கொள்முதலை விரைவுபடுத்தவேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.