தி.மு.கவின் ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை தி.மு.க தலைமை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் சமீபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ர வியை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகை தி.மு.க. நிர்வாகி மீது காவல்துறையில் புகார் அளித்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தி.மு.க தலைமை கிருஷ்ணமூர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கையை எடுத்து அவரை கட்சியில் இருந்துஇடை நீக்கம் செய்தது. இச்சம்பவம், நிகழ்ந்து சில மாதங்களே கடந்த நிலையில், தி.மு.க தலைமை கிருஷ்ணமூர்த்தியை மீண்டும் கட்சியில் இணைத்துள்ளது.