திமுக அரசின் அடுத்த ஊழல்?

ஆட்சிப் பொறுப்பேற்று 6 மாத காலம்கூட முடிவடையாத சூழலில், கொரோனா நிவாரண தொகுப்பு பொருட்கள் ஊழல், மின்சார கொள்முதல் ஊழல் என இப்போதே தி.மு.க மீது வரிசையாக ஊழல் புகார்கள் எழத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், மற்றொரு ஊழல் புகாரும் எழுந்துள்ள்து. போக்குவரத்துத் துறை சார்பில் அதன் ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்புகள் வழங்கப்படுவது வழக்கம். இதில் அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மகன், சாதாரண எண்ணையில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளை 600 ரூபாய்க்கு டெண்டர் பேசியிருப்பதாகவும் அதில் 30 சதவீத கமிஷனை கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதே டெண்டரை ஆவின் நிறுவனத்துக்கு வழங்கினால், நெய்யால் தயாரிக்கப்பட்ட இனிப்புகளே ஒரு கிலோ ரூ. 420 ரூபாய்க்கு கிடைக்கும். இந்த இனிப்புகள் 100 டன் அளவுக்கு வாங்க வேண்டியிருப்பதால் அதில் அமைச்சரின் மகனுக்கு கமிஷனாக ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து ஊழல் புகாரில் சிக்கும் தி.மு.கவினர் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.