ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக தமிழக அரசை அவமதித்ததாக பிரபல அரசியல் விமர்சகரும் தேசியவாதியுமான மாரிதாஸை தமிழக அரசின் காவல்துறை கைது செய்தது. அவர் மீது போடப்பட்ட பகைமையை தூண்டுதல், அமைதியை குலைத்தல், தேசவிரோதம் உள்பட 5 பிரிவுகளின் வழக்குகளும் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இது நீதிமன்றத்தில் நிற்காது என முன்பே தெரிந்துகொண்ட தமிழக அரசு, தூசுத்தட்டி தயாராக வைத்திருந்த தனியார் தொலைக்காட்சி மின்னஞ்சல் வழக்கில் மாரிதாஸ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்தது. இதிலும் அவர் வெளிவந்துவிடுவாரோ என எண்ணி, தற்போது தப்ளிக் ஜமாத் அமைப்பு குறித்து அவதூறு என கடந்த ஏப்ரலில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாரிதாசை மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளது. முஸ்லிம் நாடான சௌதியே தடைவிதித்த தப்ளிக் ஜமாத் மீது இங்குள்ளவர்களுக்கு மட்டும் இவ்வளவு அக்கறை ஏனோ?