தி.மு.க அரசின் கண்துடைப்பு நாடகம்

வீடுகள், வணிக நிறுவனங்களுக்கான மின்சார கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்கள், விலைகள், வரிகளை மிக அதிகமாக உயர்த்தி அவர்களை தினமும் வாட்டி வதைத்து வருகிறது தமிழக அரசு.  அவ்வகையில், சமீபத்தில் தாழ்வழுத்த மின்நுகர்வோர் பிரிவின்கீழ் வரும் குறு, சிறு தொழில் நிறுவனங்களை முடக்கும் விதமாக அவர்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை 25 சதவீதம் அதிகரித்தது தி.மு.க அரசு. இதனை முற்றிலும் நீக்க வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்து வந்தனர். கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து உச்சபட்சபயன்பாட்டு நேர மின்கட்டணத்தை வெறும் 10 சதவீதம் குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தொழில்துறையினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தொழில் துறையினர் கேட்டது வேறு, ஆனால் தமிழக அரசு செய்துள்ளது வேறு. நிலைக்கட்டணத்தை அவர்கள் குறைக்கவில்லை, உச்சபட்ச பயன்பாட்டு நேர மின்கட்டணத்தை அடியோடு நீக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்கவில்லை. எனவே, தமிழக அரசின் இந்த நடவடிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம்தான்” என கூறுகின்றனர்.