கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் தேர்தலுக்கு பா.ஜ.க தனித்துப் போட்டியிட்டது. இதில் 134வது வார்டில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றார். இதையடுத்து முதன்முறையாக சென்னை மாநகராட்சிக்குள் பா.ஜ.க அடியெடுத்து வைத்தது. சென்னை மாநகராட்சி தேர்தலில் மற்ற இடங்களில் பா.ஜ.க தோல்வியடைந்தாலும், பல இடங்களில் 2 ஆம் இடத்தை பிடித்தனர் என்படு பா.ஜ.கவின் வாக்கு வங்கி வலுப்பெற்று வருவதை உணர்த்தியது. இந்நிலையில் 198வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லியோ சுந்தரம் தற்போது பா.ஜ.கவில் இன்று இணைந்துள்ளார். அ.தி.முக.வில் இருந்த அவர் மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு கடந்த பிப்ரவரி மாதம் தி.மு.கவில் இணைந்தார். தற்போது அவர், பா.ஜக.வில் இணைந்துள்ளார். லியோ சுந்தரத்தின் வரவைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் பா.ஜ.க உறுப்பினர்களின் பலம் 2 ஆக அதிகரித்துள்ளது.