கொரோனாமுழு ஊரடங்குகாரணமாக,திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய முறையாக அனுமதி பெற்ற விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை விற்பனை செய்வதற்காக பெருமாநல்லூர் வந்துள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்தி மாமூல் கேட்டுள்ளார்ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவரான சி.டி.வேலுசாமி. விவசாயி தர மறுக்கவே தங்கள் பகுதிக்குள் வெளிநபர்கள் வந்து எந்த பொருளையும் விற்ககூடாது என்று தகராறு செய்துள்ளார். இதில், பெருமாநல்லூர் காவல்துறையினர் தலையிட்டபோது, அவர்களை இதில் தலையிடக் கூடாது என்று மிரட்டப்பட்டனர். இப்படி, மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்த பின்னரும் தி.மு.கவினர் அட்டூழியங்களில் ஈடுபட்டு வருவது விவசாயிகளிடமும் பொதுமக்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர், தனது கட்சியினரின் இதுபோன்ற தவறான செயல்பாடுகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.