தடுப்பூசி முகாமில் தி.மு.கவினர் அராஜகம்

முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட லக்காபுரத்தில் கடந்த 7ம் தேதி, கொரோனா தடுப்பூசி முகாம் நடப்பதாக முன்களப் பணியாளர்களுக்கு தகவல் அறிவிக்கப்பட்டது.அவர்கள் தடுப்பூசி முகாமிற்கு சென்றனர்.ஆனால் உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை.பக்கவாட்டு வழியா தி.மு.க பிரமுகர்களின் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட சிலர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.அவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டது.முகாமிற்கு வெளியே நின்றிருந்த முன்களப் பணியாளர்கள் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டனர் எனபத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.இதுபோன்ற சம்பவங்கள் முன்களப் பணியாளர்களை அலைக்கழிப்பதுடன், கொரோனா பரவல் அதிகரிக்கவும் வழிவகுக்கிறது.முதல்வரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு தி.மு.கவினர் செயல் குந்தகம் விளைவிப்பதாக உள்ளது. எனவே, ஒவ்வொரு பகுதியில் உள்ள முன்னுரிமை பெற்றவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, காவல்துறையினரின் உதவியுடன், சமூக இடைவெளியைக் கடைபிடித்து அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.