கல்வித்துறையில் மத்திய பட்ஜெட் 2022 அறிவிப்புகளை அமல்படுத்துவது குறித்த இணையவழி கருத்தரங்கிற்கு கல்வி அமைச்சகம்ஏற்பாடு செய்திருந்தது. 2020ம் ஆண்டு பிரதமரின் ‘இ வித்யா’ திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்தார். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு வகுப்பு, ஒரு சேனல் முன்முயற்சி அனைத்து 12 வகுப்புகளுக்கும் 2020 செப்டம்பர் 1ம் தேதி தொடங்கப்பட்டது. தொலைதூரங்களுக்கு தரமான டிஜிட்டல் கல்வியை கொண்டு சேர்க்க ஒரு வகுப்பு- ஒரு சேனல் திட்டத்தை விரிவுபடுத்துவதே இதன் முக்கிய நோக்கம். இதில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்கார், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பல்வேறுத்துறை நிபுணர்கள், அரசு மற்றும் அரசு அல்லாத அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று கருத்துகளை பறிமாறிக்கொண்டனர்.