காங்கிரஸ் கட்சியில் இருந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் 170 எம்.எல்.ஏக்கள், ஏழு ராஜ்யசபா எம்.பி.,க்கள் விலகி, வெவ்வேறு கட்சிகளில் இணைந்துள்ளனர். மத்தியப் பிரதேசம், மணிப்பூர், கோவா, அருணாச்சலப் பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட இந்த எம்.எல்.ஏ.,க் களின் கட்சித் தாவல்களே காரணம். ஆனால், இதேகாலத்தில், பா.ஜ.கவில் இருந்து 18 எம்.எல்.ஏக்கள் மட்டுமே விலகி, வேறு கட்சிகளில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டுள்ளனர் என ஏ.டி.ஆர் எனப்படும், ‘ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம்’ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.