தேசியக்கொடிக்கு அவமரியாதை

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, முஸ்லீம் கமிட்டி ஒன்றின் சார்பில் மிலாடி நபியை முன்னிட்டு ஒரு பேரணி நடத்தப்பட்டது. அதில், நூற்றுக்கணக்கான முஸ்ளிம்கள் கலந்துகொண்டு ஹனுமன் கஞ்ச் பகுதியில் சுற்றித் திரிந்தனர். இந்நிகழ்வின்போது இரண்டு முஸ்லிம்கள் தேசியக் கொடியின் மீது கால் வைத்து அவமரியாதை செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதையடுத்து பிரயாக்ராஜ் காவல்துறை வழக்குப்படிவு செய்து விசாரணை நடத்தியது. அதன்படி, இதில் ஈடுபட்ட ஷம்ஷாத், ஃபராஸ் ஆகிய இரண்டு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். அவர்கல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க தேடுதல் வேட்டை துவக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், நாட்டின் பல பகுதிகளில் முஸ்ளிம்களால் இதேபோன்ற ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. அதில் சில இடங்களில் திட்டமிட்ட வகையில் வன்முறைகள் உருவாக்கப்பட்டன, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதத்தில் தலையை வெட்டுவோம் (சர் தன் சே ஜூடா) என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. அவ்வகையில், உத்தரப் பிரதேசத்தின் அமேதி மற்றும் அஸம்கத் ஆகிய இடங்களில் இந்த கோஷங்களை சிலர் எழுப்பினர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலும் இந்த கோஷங்கள் எழுப்பப்பட்டது. கர்நாடகாவின் பெலகாவியில் ஹிந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் உள்ள மோமின்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஹிந்துக்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டது. தீவைப்பு, கல்லெறிதல், திருட்டு, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களும் நிகழ்த்தப்பட்டன.