தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அசம்கானின் மகனௌமான அப்துல்லா அசம் கானுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராம்பூர் மாவட்டம் சுவார் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வழக்கில், இந்த தண்டனையை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 2008ல், மத்திய ஆயுதப்படை முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து காவலர்கள் தீவிர வாகன சோதனை நடத்தின்ர். அப்போது, அசம்கான் தனது ஆதரவாளர்களுடன் வந்த வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. இதைக் கண்டித்து அவர் நெடுஞ்சாலையில் தர்ணா போராட்டத்தை நடத்தினார். இதில் தான் அவர் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்கு முன்புதான் இவரது தந்தை அசம்கான் அவதூறு பேச்சு குறித்த வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அப்துல்லா அசம்கான் ஏற்கனவே 2019ம் ஆண்டிலும் ஒருமுறை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.