திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் அரசு உயர்நிலை பள்ளியின் மாணவி சத்யா, அறிவியல் ஆசிரியர் தமிழ்கனி வழிகாட்டுதலுடன் புற ஊதா கதிர் விளக்கை பயன்படுத்தி, 7 விநாடிகளில் ரூபாய் நோட்டு உள்ளிட்ட பொருட்களில் உள்ள கிருமி தொற்றை அழிக்கும் சிறிய மரப்பெட்டகம் ஒன்றை 1,500 ரூபாயில் வடிவமைத்துள்ளார். அதனுள்ளே புற ஊதா விளக்கும் அதன் ஒளியை நான்கு புறமும் எதிரொளிக்க முகம் பார்க்கும் கண்ணாடிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ரூபாய் நோட்டுகள் மட்டும் இல்லாமல் பிஸ்கெட், காய்கறி உள்ளிட்ட பொருட்களை உள்ளே வைத்தால், அவற்றின் மீது படர்ந்துள்ள கிருமி தொற்றுகள் அழிக்கப்படும். நமது தேவைக்கு ஏற்ப பெரிய வடிவிலும் பெட்டியை வடிவமைக்கலாம்’ மாணவி சத்யா தெரிவித்தார்.