தமிழகத்தில் கடந்த அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து காவல்துறை அனுமதியளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய மறுத்து, திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.