இந்திய சுதந்திரப் போராட்டத்தின் விவரிப்பில் ஒரு மிகப்பெரிய தவறைத் திருத்தும் மிகவும் அவசியமான ஒரு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அரசால் நியமிக்கப்பட்ட குழு ஆய்வு செய்து, இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் அகராதியிலிருந்து 387 மாப்ளா வன்முறையாளர்களின் பெயர்களை நீக்க அரசிடம் பரிந்துரைத்துள்ளது. அப்பரிந்துரையில், 387 பேரும் ஹிந்துக்களுக்கு எதிராக கலவரம் செய்தவர்கள். மலபாரில் 1921ல் நடைபெற்ற மாப்ளா கலவரம் சுதந்திரப் போராட்டம் அல்ல. அது மதமாற்றத்தை மையமாகக் கொண்ட ஒரு அடிப்படைவாத இயக்கம். அக்கலவரக்காரர்களால் எழுப்பப்பட்ட கோஷங்கள் எதுவும் தேசியவாதத்திற்கு ஆதரவாக இல்லை. அது கலிபாவை நிறுவும் முயற்சி மட்டுமே. அது வெற்றி பெற்றிருந்தால், இந்தியா அப்பகுதியை இழந்திருக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு, இந்த நீக்கம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்ததுடன் இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு மத்திய அரசை வாழ்த்தியது.