காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில்கரியமில வாயுவை உறிஞ்சக்கூடிய திடப் பொருளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.இதனை சிக்ரி இயக்குனர் கலைச்செல்வி, தலைமையில் விஞ்ஞானிகள் ரவிபாபு, சிராந்தி, வாசுதேவன், சிவசண்முகம் கண்டுபிடித்துள்ளனர்.இதுகுறித்து பேசிய சிக்ரி இயக்குனர், ‘சிக்ரி நிறுவனத்தின் 75வது ஆண்டைக் கொண்டாடும் விதத்தில் 19 கண்டுபிடிப்புகளை தேர்வு செய்துள்ளோம்.இதில் 5 தொழில்நுட்பங்களை இவ்வாண்டு கண்டுபிடித்து நாட்டிற்கு அர்பணிக்க விரும்புகிறோம்.அதில் முதல் கண்டுபிடிப்பாக கரியமில வாயுவை உறிஞ்சும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளோம். பாரதத்தில் முதன்முறையாக திட நிலையில் கரியமில வாயுவை பிரித்தெடுப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதன் முக்கிய அம்சம், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறக்கூடிய கரியமில வாயுவை அதே வெப்பநிலையில் உறிஞ்ச வல்லது. உறிஞ்சப்படும் இந்த கரியமில வாயுவை சிலவகை அமிலங்களாக உருமாற்றம் செய்து பயன்படுத்தலாம்.தற்போது கோவையில் உள்ள சம்மிட்ஸ் ஹைக்ரோனிக்ஸ் என்ற நிறுவனத்திடம் தொழில்நுட்பத்தை பரிமாற்றம் செய்துள்ளோம். இதனைப் பயன்படுத்தி சிமென்ட் ஆலை, அனல் மின் நிலையங்கள், இரும்பு தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் பயன்படுத்தி கரியமில வாயுவைக் கட்டுப்படுத்த முடியும்’ என்றார். தற்போது புவியின் சராசரி வெப்பத்தில் 1.5 சென்டிகிரேட் கூடியுள்ளது.இதனை குறைப்பதற்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் கரியமில வாயுவை குறைக்க வேண்டும்.இல்லையெனில் மிகப்பெரிய அபாயம் நிகழும்.அதற்கு கண்டுபிடிப்பு உதவும்’ என்றார்.