370 சட்டப்பிரிவு தொடர்பான பாகிஸ்தான் பத்திரிகையாளர் கேள்விக்கு பதில் அளித்த அவர், ‛‛காஷ்மீரில் ஆர்டிக்கிள் 370 நீக்கப்பட்ட பிறகு அங்கு ஜனநாயகம் இல்லாமல் போய் விட்டது. இது ஒரு தவறான முடிவு. தாங்கள் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான ஆர்டிக்கிள் 370ஐ மீண்டும் கொண்டு வருவது பற்றி பரிசீலிப்போம்” என கூறினார். திக்விஜய் சிங்கின் இந்த கருத்துக்கு பா.ஜ.கவின் அமித் மால்வியா, தேசிய செய்தித்தொடர்பாளர் சமித் பாத்ரா, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களும், காஷ்மீர்வாசிகள், பொதுமக்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நெட்டிசன்களும் திக்விஜய் சிங்கிற்கு டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில், #Article370, #Digvijaysingh போன்ற ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின.