டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி

பாரதத்தின் டிஜிட்டல் பொருளாதாரம் 2014 மற்றும் 2019க்கு இடையில் நாட்டின் பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்தது என ரிசர்வ் வங்கி வெளியிடுள்ள ஒரு கட்டுரை தெரிவிக்கிறது. ரிசர்வ் வங்கியின் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த திரேந்திர கஜ்பியே, ரஷிகா அரோரா, ஆர்ஹம் நஹர், ரிக்ஸென் யாங்டோல் மற்றும் இஷு தாக்கூர் ஆகியோர் எழுதிய இந்த கட்டுரையில், ‘பாரதத்தின் டிஜிட்டல் பொருளாதாரம் சுமார் 62.4 மில்லியன் வேலைகளை உருவாக்கியுள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பில், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் 2014 மற்றும் 2019 க்கு இடையில் 15.62 சதவீத வளர்ச்சி விகிதத்தை ஆண்டுதோறும் வெளிப்படுத்தியது, அதே நேரத்தில் நாட்டின் பொருளாதாரம் (ஜி.ஏ.வி) ஆண்டுதோறும் 6.59 சதவீத கூட்டு விகிதத்தில் வளர்ந்தது. பாரதத்தின் முக்கிய டிஜிட்டல் பொருளாதாரம் (வன்பொருள், மென்பொருள் வெளியீடு, இணைய வெளியீடு, தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் சிறப்பு மற்றும் ஆதரவு சேவைகள்) 2014ல் மொத்த மதிப்பு கூட்டலில் 5.4 சதவீதத்திலிருந்து 2019ல் 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. பாரதம் 9.47 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.டிஜிட்டல் பொருளாதாரம் டிஜிட்டல் அல்லாத துறைகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட சப்ளையராக செயல்படுகிறது. புதுமையைத் தூண்டி, திறன்களை உருவாக்கி, சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தின் திறனை அதிகரிக்க, கணினிகள், எலக்ட்ரானிக்ஸ் போன்றவற்றின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் மேக் இன் இந்தியா, பி.எல்.ஐ திட்டம் போன்ற கொள்கைகள் தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானவை. இதனால் தேசம் வளர்ச்சி முன்னோக்கி செல்லும்’ என தெரிவித்துள்ளனர்.