மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ‘சாலை திட்டங்களுக்காக அரசு மூலதனச் சந்தையில் இருந்து நிதி திரட்ட யோசனை செய்துள்ளது. பங்குச் சந்தையில் சிறிய முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகளை பெறுவோம். கட்டுமான உபகரணம் துறையின் அளவு ரூ. 50,000 கோடி. ஆனால் கச்சா எண்ணெய், டீசல் விலை உயர்வால் இந்தத் துறை சிக்கலை எதிர்கொண்டுள்ளது. விரைவில், டீசலை ஒழிக்க வேண்டும். இது அபாயகரமான எரிபொருள். மெத்தனால், எத்தனால், பசுமை ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருட்களை ஊக்குவிப்பதே அரசின் கொள்கை. மின்சார வாகனங்கள் தான் எதிர்காலம். சில பாரத நிறுவனங்கள் மின்சார வாகனங்களை தயாரிக்கத் தொடங்கியதால் பாரத ஆட்டோமொபைல் நிறுவனங்களின் சந்தைப் பங்கு அதிகரித்துள்ளது, வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்கு குறைந்துள்ளது. போதுமான நிலக்கரி இருப்பு இருந்தும் பாரதம்ம நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறது. உற்பத்தியை அதிகரிக்க 60 நிலக்கரி சுரங்கங்களை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது’ என கூறினார்.