மேற்கு வங்க மாநிலத்தில், ஸ்ரீராம நவமி வழாவின்போது ஹிந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களும் திருணமூல் காங்கிரஸ் கட்சியினரும் திட்டமிட்டு வன்முறைகளை நிகழ்த்தினர். பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நரசிம்ம ரெட்டி தலைமையிலான 6 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு இது குறித்து விசாரணை நடத்த மேற்கு வங்கம் சென்றது. காவல்துறையினர் அவர்களுக்கு போதிய ஒத்துழைப்ப வழங்கவில்லை, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விடவில்லை, மொத்தத்தில் அவர்கள் சர்வாதிகாரிகள் போல் செயல்பட்டனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நரசிம்ம ரெட்டி, ஹூக்ளி மாவட்டத்தில், ஸ்ரீராமநவமி ஷோபா யாத்திரையின் போது வன்முறையைத் தொடர மேற்கு வங்க காவல்துறை அனுமதித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் நீதிபதி நரசிம்ம ரெட்டி, “வன்முறை பாதித்த பகுதிகளை பார்வையிட எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 144 தடையை அமல்படுத்தாத பகுதிகளுக்கும் கூட நாங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த இடங்களில் நாங்கள் பார்வையிட்டால் அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை நாங்கள் அறிந்து கொள்வோம் என்பதால் காவல் துறை எங்களை அங்கு அனுமதிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவும் எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எங்கள் அழைப்புகளுக்கு காவல்துறையில் இருந்து யாரும் பதிலளிக்கவும் இல்லை. சமீபத்திய வன்முறைகளைத் தடுக்க மேற்குவங்க காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வன்முறைகள் நடக்க அவர்கள் அனுமதித்துள்ளதாகவும் நாங்கள் உணர்கிறோம்.
மேலும், இந்த சம்பவத்தில் மேற்கு வங்க காவல்துறையினர் சர்வாதிகாரிகளாக செயல்படுகின்றனர். சமீபத்தில் தெலுங்கானாவில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதன்பின், தெலுங்கானா காவல்துறையினர் கூட மேற்கு வங்க காவலர்களை போல செயல்படுவதாக பலர் என்னிடம் முறையிட்டனர். இன்று மமேற்குவங்க காவல்துறையினர் எங்களை நடத்திய விதம், அதனை உறுதிப்படுத்துகிறது. நாட்டில் வேறு எந்த இடத்திலும் இந்த வகையான காவல்துறை சர்வாதிகாரத்தை நீங்கள் பார்க்க முடியாது. அவர்கள் ஒரு கட்சியின் நிகழ்ச்சி நிரலை ஊக்குவிப்பதில் மும்முரமாக உள்ளனர்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை சேர்ந்த உண்மை கண்டறியும் குழுவின் மற்றொரு உறுப்பினர் சாரு வாலி கண்ணா, “உண்மை கண்டறியும் குழு பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க மறுபடியும் முயற்சிகளை மேற்கொள்ளு. வேற்கு வங்க காவல்துறையினர் எங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்கான எங்கள் அணுகுமுறையை நாங்கள் மறுசீரமைப்போம். காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து பேச எங்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை” என்று கூறினார்.