பிரிக்வொர்க் ரேட்டிங்ஸ் என்ற உள்நாட்டு தர நிர்ணய நிறுவனம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 10.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததை விட வேகமான மீட்சி, பொருளாதார வளர்ச்சி இருக்கும் என கருதப்படுவதால், இதற்கு முன்பாக பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், தற்போது 10 முதல் 10.5 சதவீதமாக இருக்கும் என திருத்தி அறிவித்து உள்ளது.