மத சுதந்திரம் அழிப்பு

திபெத்திய தன்னாட்சிப் பகுதியில் உள்ள கார்ட்ஸே பகுதியில் உள்ள உலகப்புகழ் பெற்ற புத்தர் சிலை, கடந்த மாதம் கம்யூனிச சீன அரசால் இடித்துத் தள்ளப்பட்டது. இந்த சிலை உடைக்கப்பட்ட செய்தியையும் புகைப்படங்களையும் மற்ற நாட்டினருடன் பகிர்ந்துக்கொண்டதாகக்கூறி சீன அதிகாரிகள் டிராகோவின் காடன் நம்கியால் லிங் மடாலயத்திலிருந்த 11 துறவிகளையும் 4 திபெத்தியர்களையும் இதுவரை கைது செய்துள்ளனர் என ரேடியோ ஃப்ரீ ஏசியா தெரிவித்துள்ளது. சீனாவில் மாவோவின் கலாச்சாரப் புரட்சிக்குப் பின்னர் சீனா திபெத்திய பௌத்தத்தை குறிவைத்து அழித்து வருகிறது, தற்போதைய ஜி ஜின்பிங்கின் ஆட்சியில் இந்த அடக்குமுறை தொடர்வதுடன் அவை கடுமையாக்கப்பட்டு உள்ளன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி திபெத்துக்குள் மட்டுமின்றி திபெத்துக்கு வெளியேயும் திபெத்திய பௌத்தத்தை ஒழிக்க பல வழிமுறைகளைக் கையாண்டுள்ளது. பல இடங்களில், திபெத்திய மடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. துறவிகள் மீதான கட்டுப்பாடுகள் கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளன என குளோபல் ஆர்டர் என்ற சிந்தனைக் குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.