இதனால் அதில் முதலீடு செய்த பொதுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி மற்றும் எஸ்பிஐக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், எல்.ஐ.சி நிறுவனம் இதுகுறித்து வெளியிட்ட விளக்க அறிக்கையில், அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக எல்.ஐ.சி ரூ. 30,127 கோடியை முதலீடு செய்தது. நடப்பு ஆண்டு ஜனவரி 27ம் தேதி நிலவரப்படி அந்த முதலீட்டின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 56,142 கோடியாக உயர்ந்துள்ளது. எல்.ஐ.சி நிர்வகித்து வரும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் அதானி குழுமத்தின் பங்கு 0.975 சதவீதம் மட்டுமே. அதானியின் கடன் பத்திரங்களுக்கு ‘‘ஏஏ’’ மற்றும் அதற்கும் மேலான தர மதிப்பீடுகளே வழங்கப்பட்டுள்ளன. எனவே எல்.ஐ.சியின் முதலீடுகள் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) வழிகாட்டுதல்களுக்கு இணக்கமாகவே உள்ளது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.