பல ரோஹிங்கியா முஸ்லிம்கள் சட்டவிரோதமாக பாரதத்திற்குள் நுழைந்து நாடு முழுவதும் பரவியுள்ளனர். தமிழகம், அசாம், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பாரதத்தின் பல பகுதிகளில் அவர்கள் பதுங்கியுள்ளனர். இங்குள்ள பல முஸ்லிம் முகவர்கள் இதுபோன்றவர்களுக்கு போலி அடையாள அட்டைகள், பணம், தொழில் என பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர். இப்படி ஊடுருவும் ரோஹிங்கியாக்கள் பாரதத்தில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அதில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ரோஹிங்கியாக்களில் பெரும்பாலானோர் சிறைகளில் உள்ள நிலையில், சிலர் மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டனர். அவ்வகையில், சமீபத்தில் மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிமான ஜாபர் ஆலம், கடந்த மே 2ம் தேதி ஜம்மு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரின் விசாரணையில், ஜாபர் ஆலம் சட்டவிரோதமாக பாரதத்தில் நுழைந்து ஜம்மு சென்று போலி ஆவணங்கள் மூலம் ஜம்முவில் வேலை தேட முயன்றதும் இங்குள்ள முகவர்கள் அவருக்கு உதவியதும் தெரியவந்தது. இதனையடுத்து, ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர், ஜாபர் ஆலமை நாடு கடத்துவதற்காக மணிப்பூருக்கு அழைத்துச் பாரத மியான்மர் நட்புறவுப் பாலத்தில் மியான்மர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.