நியூயார்க் டைம்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதத்தில் உண்மையான கொரோனா இறப்பு எண்ணிக்கை புள்ளிவிவரங்களுக்கு முரணானது மற்றும் உண்மையான இறப்புகள் 42 லட்சம் வரை இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.இந்த அறிக்கையை ‘முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் தவறானது’ என்று மத்திய சுகாதார அமைச்சகம் நியூயார்க் டைம்ஸ் அறிக்கைக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.மேலும், இந்த அறிக்கைக்கு எந்த ஆதாரங்களும் இல்லை, உண்மையான மதிப்பீடுகளின் அடிப்படையில் இல்லை’ என்றும் தெரிவித்துள்ளது.முன்னதாக, கடந்த 20 நாட்களாக இந்தியாவில் புதிய தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.நாட்டின் மீட்பு 90 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.கடந்த வாரம் முதல் 24 மாநிலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.