நாடு திரும்ப அனுமதி மறுப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த சேர்ந்த கேரளாவைச் சேர்ந்த நான்கு பெண்கள் மீண்டும் பாரதம் திரும்பி வர அனுமதிப்பது சாத்தியமில்லை என தூதரக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் வெவ்வேறு தாக்குதல்களில் பயங்கரவாதிகளான அவர்களின் கணவர்கள் கொல்லப்பட்டனர். 2019 நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் முன் சரணடைந்த ஆயிரக்கணக்கான ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளில் கேரளாவைச் சேர்ந்த சோனியா செபாஸ்டியன் எனும் ஆயிஷா, மெர்ரின் ஜேக்கப் எனும் மரியம், நிமிஷா எனும் பாத்திமா ஈசா மற்றும் ரஃபீலா இந்த முஸ்லிம் பெண்களும் அடங்குவர்.

ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் தலைவரான அஹ்மத் ஜியா சரஜ், 13 நாடுகளைச் சேர்ந்த 408 ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தான் சிறைகளில் உள்ளனர்.. இதில் 4 இந்தியர்கள், 16 சீனர்கள், 299 பாகிஸ்தானியர்கள், 2 பங்களாதேஷியர்கள், 2 மாலத்தீவினர் அடங்குவர். கைதிகளை நாடு கடத்த ஆப்கானிஸ்தான் அரசு பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றார். முஸ்லிம் பயங்கரவாதத்தில் இந்த கேரள பெண்களுக்கு வலுவான நம்பிக்கை இருக்கிறது. அவர்களை அனுமதிப்பது சாத்தியமில்லை என புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.