அண்மையில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் சிலைகள் உடைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர், கோயிலின் உள்ளே அதிகாலையில் பக்தர்களால் பிடிக்கப்பட்டார். தொடக்கத்தில் அவரை வெளியேற்ற முயன்றபோது, உங்கள் பின்னால் வர முடியாது, போலீஸ் வந்தால்தான் வர முடியும் என்று கூறிய அந்த நபரை போலீஸ் விசாரணையில் மனநலம் இல்லாதவர் என்று விடுவிக்கப்பட்டார். இதைக்கண்டித்து, இந்து முன்னணி சார்பில் செயல்படாத அறநிலையத்துறையும், வழக்கை திசைதிருப்பும் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அவிநாசியில் நடைபெற்றது. கூட்டம் துவங்கியதிலிருந்து முடியும் வரை மழை கொட்டிய போதும் ஒரு அணுவும் அசையாமல் வைராக்கியத்தோடு தாய்மார்கள் இளைஞர்கள் போராட்டத்தில் பங்கெடுத்தார்கள். தமிழகத்தில் மிக வேகமாக இந்து ஒற்றுமை உருவாகி வருகிறது. இந்த காரியத்தை இந்து முன்னணி வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறது. என்பதை இன்றைய அவிநாசி நிகழ்ச்சி உலகத்திற்கு உணர்த்தி இருக்கிறது. அவிநாசி ஒரு புதிய சரித்திரத்தை படைத்திருக்கிறது. கோவில்களுக்கு ஆபத்து என்றால் இந்துக்கள் போராட வர மாட்டார்கள் என்ற நிலையை மாற்றியது.