பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்புரையாற்றிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ‘ஊழல் மற்றும் கசிவுகள் இல்லாத ஜனநாயகத்தை தொழில்நுட்பம் சாத்தியமாக்கியுள்ளது. கடந்த ஆறு வருடங்களாக செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் தகுந்த பயனாளிகளுக்கு எந்தவிதமான தாமதமும் இன்றி சென்று சேர்வதை உறுதி செய்வதற்காக தொழில் நுட்பத்தின் அடிப்படையிலான கட்டமைப்பில் தற்போதைய அரசு உருவாக்கியுள்ளது. மறைமுக வரிகளின் வரலாற்றில் மிகப்பெரிய சீர்திருத்தமான ஜி.எஸ்.டி வரி, கள்ளப் பொருளாதாரம் காரணமாக பாரதத்தின் வரி வருவாய் வளராது என்ற பல்லாண்டு கால கண்ணோட்டத்தை தகர்த்துள்ளது. செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நீதி வழங்கலை விரைவுபடுத்தி நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்’ என்று கூறினார்.