சன்னி உலமா வாரியத்தைச் சேர்ந்த முஸ்லீம் தலைவர்கள், கர்நாடகாவில் ஆட்சியமைக்க உள்ள காங்கிரசிடம், எங்களால் தான் நீங்கள் வெற்றி பெற்றீர்கள். முஸ்லிம்களால்தான் 72 தொகுதிகள் காங்கிரஸ் வென்றது. எனவே, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த வெற்றி பெற்ற ஒரு வேட்பாளருக்கு துணை முதல்வர் பதவியை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்லனர். இது மட்டுமில்லாது, ஐந்து முஸ்லிம் எம்.எல்.ஏக்களுக்கு உள்துறை, வருவாய், சுகாதாரம் மற்றும் பிற துறைகள் போன்ற இலாகாக்களை வழங்க வேண்டும் என கோரியுள்ளனர். காங்கிரஸால் 15 முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர், அவர்களில் 9 பேர் வெற்றி பெற்றனர்.
இதுகுறித்து கர்நாடக மாநில வக்பு வாரியத் தலைவர் ஷாபி சதி பேசுகையில், “துணை முதல்வர் முஸ்லிமாக இருக்க வேண்டும். எங்களுக்கு 30 தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தேர்தலுக்கு முன்பே நாங்கள் கூறினோம். ஆனால், எங்களுக்கு 15 தொகுதிகளே கிடைத்தன. அதில் ஒன்பது முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஏறக்குறைய 72 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது முஸ்லீம்களால் தான். இதற்கு நன்றி சொல்ல வேண்டியது காங்கிரசின் பொறுப்பு. ஒரு சமூகமாக நாங்கள் காங்கிரசுக்கு நிறைய கொடுத்துள்ளோம். இப்போது நாம் பதிலுக்கு ஒன்றைப் பெறுவதற்கான நேரம் இது.
ஒரு முஸ்லீம் துணை முதல்வரையும் உள்துறை, வருவாய் மற்றும் கல்வி போன்ற நல்ல துறைகளைக் கொண்ட ஐந்து அமைச்சர்களையும் நாங்கள் விரும்புகிறோம். இவை அனைத்தும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, சன்னி உலமா வாரிய அலுவலகத்தில் அவசரக் கூட்டத்தை நடத்தினோம். நாங்கள் ஒரு துணை முதல்வர் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்று மட்டுமே கேட்கிறோம். ஆனால், உண்மையில் அது ஒரு முஸ்லிம் தான் முதல்வர் ஆக்கப்பட வேண்டும், ஏனென்றால் கர்நாடகாவின் வரலாற்றில் இது எப்போதும் நிகழவில்லை, மாநிலத்தில் 90 லட்சம் மக்கள் முஸ்லிம்களாக உள்ளனர். எஸ்.சி பிரிவினரைத் தவிர மிகப்பெரிய சிறுபான்மை சமூகம் நாங்கள் தான்” என கூறியுள்ளார்.