பாரதீய ஜனதாவின் விளம்பர இலக்கியத் துறையின் இணை பொறுப்பாளரான விகாஸ் ப்ரீதம் சின்ஹா, தனது டுவிட்டர் பதிவில், ‘கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு அரபு மொழி தெரியாது. ஆனால், நாடு முழுவதும் லட்சக்கணக்கான மசூதிகளில் இருந்து ஒரு நாளைக்கு ஐந்து முறை அஸான் அரபியில் ஓதப்படுகிறது. அஸானை இந்திய மொழிகளில் பாராயணம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு அரசாங்கத்தையும் முஸ்லீம் மதகுருக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன், இதன் மூலம் அதன் அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் மக்கள் அறிந்து கொள்ள முடியும்’ என ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.