ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவின் மதகுருவான சயீத் சர்வார் சிஷ்டி தனது ஆத்திரமூட்டும் கருத்துக்களால் சமீபத்தில் சலசலப்பை ஏற்படுத்தினார். கடந்த மாதம், சர்வார் சிஷ்டியின் மருமகன் கௌஹர் சிஷ்டி, நுபுர் ஷர்மாவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டு, அஜ்மீர் ஷெரீப் தர்காவுக்கு வெளியே ‘தலை துண்டிக்கப்படும்’ கோஷத்தை எழுப்பினார். அது நடந்த சில நாட்களுக்குப் பிறகு, அவரது மகன் சையத் ஆதில் சிஷ்டி, ஹிந்து கடவுள்களுக்கு எதிராக மிகவும் ஆட்சேபனைக்குரிய மற்றும் இழிவான வீடியோ அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த விஷ்வ ஹிந்து பரிஷத், அவரை உடனடியாக கைது செய்யுமாறு ராஜஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் இடம் பேசிய வி.ஹெச்.பி இணைப் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின், “சிஷ்டியின் நச்சு வார்த்தைகள் பற்றி உலகம் அறியும். இதனால் நாட்டில் வெறுப்புச் சூழல் உருவாகி, கோஷங்கள் எழுப்பப்பட்டன. உதய்பூரில் கன்னையா லால் கொல்லப்பட்டார். அவரது மகன் ஆதில் சிஷ்டி வெளியிட்ட வீடியோவில் ஹிந்து தெய்வங்களை கேலி செய்வது மிகவும் ஆட்சேபனைக்குரியது. அதை நாங்கள் ஏற்க மாட்டோம், கண்டிக்கிறோம். நாகரிகம் என்றால் என்ன என்பதை மக்கள் மறந்துவிட்டார்களா? ஹிந்துக்களின் பாதுகாப்பில் நீங்கள் உண்மையிலேயே தீவிரமானவராக இருந்தால், அஜ்மீர் ஷெரீப்பின் அனைத்து சிஷ்டிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,.ஆதில் அவரது தந்தை சர்வாருடன் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று நான் ராஜஸ்தான் அரசைக் கோருகிறேன். நீங்கள் நல்ல பழக்கவழக்கங்களைக் கற்கத் தொடங்குங்கள், ஹிந்துக்களை அவமதிக்காதீர்கள்” என்று கூறினார்.