பாரதத்தின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றபோது நிகழ்த்திய உரை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “ஒட்டுமொத்த தேசமும் திரௌபதி மர்முவை பெருமிதத்துடன் பார்க்கிறது. பாரத ஜனாதிபதியாக திரௌபதி முர்மு’ஜி பதவியேற்றார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்றது பாரதத்திற்கு குறிப்பாக ஏழைகள், விளிம்புநிலை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு முக்கியமான தருணம். ஜனாதிபதி பதவிக்காலம் சிறப்பாக அமைய அவருக்கு எனது வாழ்த்துகள். பதவியேற்ற பிறகு தனது உரையில், ஜனாதிபதி திரௌபதி முர்முஜி நம்பிக்கை மற்றும் இரக்கத்தின் செய்தியை வழங்கினார். அவர் பாரதத்தின் சாதனைகளை வலியுறுத்தினார். பாரதத்தின் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் எதிர்கால பாதையை, பார்வையை முன்வைத்தார்” என தெரிவித்துள்ளார்.