கொரானா காரணமாக, ஹால் நிறுவனத்திற்கு தேவையான மெட்டீரியல்கள் தாமதமாக கிடைப்பதால் விமான தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தேஜாஸ் விமான தயாரிப்பில் இதனால் கடந்த மூன்று மாதங்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மாதவன் அவர்கள் கூறியுள்ளார். தற்போது அனைத்தும் சராசரி நிலைமைக்கு வருகிறதால் விமான தயாரிப்பு விரைவில் துவங்கும். மூன்றாம் அலை ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில் ஜீலை முதல் விமான டெலிவரி தொடங்கும் என அவர் கூறியுள்ளார்.