மணிப்பூரில் இயல்புநிலை – மாநில காவல்துறை

மணிப்பூரில் பெரும் பாலான மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது என அம்மாநில காவல்துறை தெரிவிதுள்ளது. மாநில காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் அனைத்துப் பகுதிகளிலும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றம் நிலவும் பகுதிகளில் காவல்துறையின் அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வன்முறையாளர்களை தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. நேற்று பதற்றம் நிலவும் மாவட்டங்களில் தீவிர தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக அம்மாநில காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 12 தீவிரவாத அமைப்புகளின் பதுங்குகுழிகள் அழிக்கப்பட்டுள்ளது. 51 மற்றும் 84 மில்லிமீட்டர் அளவுகளைக் கொண்ட பீரங்கிக்குண்டுகளும், அவற்றை வெடிக்கச் செய்வற்கான கருவிகளும் தேடுதல் நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது. இம்மாத இறுதிவரை மணிப்பூரில் செல்போன், இன்டர்நெட் சேவைகளை துண்டிக்க மாநில அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.