குறையும் இடதுசாரி பயங்கரவாதம்

பாதுகாப்பு தொடர்பான செலவுகள் (SRE) திட்டத்தின் கீழ் இடதுசாரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 126 ஆக இருந்த பயங்கரவாத தாக்குதல்கள், 2018ல் 90 ஆகவும், 2021ல் 70 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம், பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய ஆயுதக் காவல் படைகளை அனுப்புவது, படைகளுக்கு சிறப்புப் பயிற்சி, ஹெலிகாப்டர்கள், மாநில காவல்துறையை நவீனமயமாக்க நிதி, உபகரணங்கள், ஆயுதங்கள், உளவுத் தகவல்கள் வழங்குவது போன்ற வழக்கமான மத்திய அரசின் செயல்பாடுகள் ஒரு புறம் நடந்து வருகிறது. மறுபுறம், பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில், அப்பகுதி மக்களுக்கு கல்வி வசதிகள், சாலை திட்டங்கள், பாலங்கள், தொலைத்தொடர்பு இணைப்புகள், வங்கி சேவை, திறன் மேம்பாட்டு பயிற்சி போன்றவை அளிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர மத்திய அரசு நிதி அளிக்கிறது, பயங்கரவாதத்தை கைவிட்டு திரும்புபவர்களுக்கு விஷேஷ திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இதனால், 60 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த பயங்கரவாதம் தற்போது கட்டுக்குள் வர ஆரம்பித்துள்ளது.