அஜ்மீர் தர்கா காதிம் சல்மான் சிஷ்டி என்பவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், முன்னாள் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை தலையை துண்டிப்பவர்களுக்கு தனது வீடு மற்றும் சொத்துக்களை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதும் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுவதாக அவர் தனது வீடியோவில் பொய்யாக ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அந்த வீடியோவில் சல்மான் சிஷ்டி போதையில் காணப்படுகிறார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, காவல்துறை இந்த விவகாரத்தில் விசாரணையில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக தர்கா மற்றும் அஞ்சுமான் அதிகாரிகளிடமும் காவல்துறையினர் பேசினர். மேலும், இந்த வீடியோ வைரலாவதை நிறுத்துமாறும் அறிவுறுத்தினர்.