திபெத்தியத் தலைவர் தலாய் லாமாவின் 86வது பிறந்த நாள், கடந்த 6ம் தேதி கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தலாய் லாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார். இந்நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள டெம்சுக் கிராமத்தினர், தலாய் லாமாவின் பிறந்த நாளை கொண்டாடினர். அப்போது, சீன எல்லைப் பகுதியில் இருந்து அந்நாட்டு ராணுவத்தினரும், பொது மக்களும், லடாக் பகுதியில் உள்ள சிந்து நதியின் மறுபுறம், கையில் பதாகைகள், சீன கொடிகளுடன் நின்று, தலாய் லாமாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.