தாதாசாஹேப் பால்கே விருது

மும்பையில் நடைபெற்ற தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் திரைப்பட இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. மேலும் இதே படத்திற்காக நடிகர் அனுபம் கெர் அந்த ஆண்டின் பல்துறை நடிகருக்கான விருதைப் பெற்றார். கன்னட நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டிக்கு, கன்னடத்தில் அவர் நடித்த ‘காந்தரா’ திரைபடத்திற்காக நம்பிக்கைக்குரிய நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. ஆண்டின் சிறந்த திரைப்படமாக ஆர்.ஆர்.ஆர் தேர்வு செய்யப்பட்டது. விக்ரம் வேதா திரைப்படத்தில் சிறந்த ஒளிப்பதிவாளராக விக்ரம் வேதா திரைப்படத்தின் பி.எஸ்.வினோத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தவிர, சிறந்த நடிகராக ரன்பீர் கபூர், சிறந்த நடிகையாக ஆலியா பட், திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக நடிகை ரேகா உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.