உத்தரப் பிரதேசத்தில் தாதா கும்பல்களிடம் இருந்து இதுவரை ரூ.1,128 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அகிலேஷ், மாயாவதி உள்ளிட்டோரது முந்தைய அரசுகளின் ஆதரவால் இவர்கள் நிழல் ராஜ்ஜியம் நடத்தி வந்தனர். கடந்தாண்டு தன்னை பிடிக்க வந்த 8 காவலர்களை தாதா விகாஷ் துபே சுட்டுக் கொன்றான் இதையடுத்து முதல்வர் யோகி ஆதித்திய நாத் உத்தரவின் பேரில், தாதா கும்பல்கள் மீதான அதிரடி நடவடிக்கையை உ.பி காவல்துறையினர் துவக்கினர். துபே சுட்டுக் கொல்லப்பட்டான். அவனது பல நூறு கோடி சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல முக்தர் அன்சாரி, அட்டீப் அகமது, சுந்தர்பாட்டி உள்ளிட்ட மற்ற தாதா கும்பல் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். சிலர் தானாக சரணடைந்தனர். அவர்களின் அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் மொத்த மதிப்பு ரூ. 1,128 கோடி. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி முதல் கடந்த ஏப்ரல் வரை, சட்ட விரோத கும்பல்கள் மீது 5,558 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 22,259 குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.