கடந்த ஆண்டு அக்டோபரில், மும்பை, புறநகர் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது, இதனால் ரயில்கள் உட்பட மொத்த மும்பை நகரமே இருளில் மூழ்கியது. நியூயார்க் டைம்ஸின் ஒரு கட்டுரை, ஒரு ஆய்வை சுட்டிக்காட்டி, ‘இந்த மின்தடை சீனாவின் ஹேக்கர்கள், பவர் கிரிட்டில் வைரஸை உட்செலுத்தி செய்த சைபர் தாக்குதலாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. மேலும், லடாக் எல்லை விவகாரத்தில், பாரதத்தை மிரட்டும் செயல் இது. எங்களால் உங்கள் நாட்டை இருளாக்க முடியும் என நிரூபிக்க இது செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் ஐந்து நாட்களில் மட்டும் சீன ஹேக்கர்கள் பாரதத்தின் தொழில்நுட்பம், வங்கி உள்கட்டமைப்புகள் மீது சுமார் 40,300 ஹேக்கிங் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ‘ரெட் எக்கோ’, “ஃபாங் சியாவோ குயிங், போன்ற சீன குழுக்கள் குவாங்டாங், ஹெனன் மாகாணங்களில் இருந்து இந்த சதி செயலில் ஈடுபட்டிருக்கலாம்’ என கூறியுள்ளது.