நேர்மையான ஆளுநரை விமர்சிப்பதா?

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தி. தேவநாதன் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பா.ஜ.க ஆட்சி அமைந்த பிறகு, ஆளுநர்கள் ஆளுங்கட்சி செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்றனர், கண்டிக்கின்றனர், நேர்மையான முறையில் நடந்துகொள்கின்றனர். இது பல கட்சிகளின் கண்களை உறுத்துகிறது. தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி நியமிக்கப்பட்ட பின், அவர் நமது பாரம்பரியம், கலாச்சாரம், தொன்மையை மீட்டு வருகிறார். ஆளுநரின் கருத்துகள் அனைத்தும் ஆபத்தானவை, அபத்தமானவை என தி.மு.க கூட்டணிக் கட்சிகள் அவரை விமர்சித்துள்ளனர். ஆளுநரின் கருத்துகளை ஏற்பதும், மறுப்பதும் அவரவர் விருப்பம். ஆளுநர், ஆளும் கட்சியின் கொள்கைகளை ஏற்கவேண்டும் என்பது விதியல்ல. ஆளுநர் சட்டத்துக்கு உட்பட்டே செயல்படுகிறார். தி.மு.கவின் கொள்கைகளை அவர் ஏற்கவில்லை, நேமையாகச் செயல்படுகிறார் என்பதற்காக ஆளுநரை கடுமையான வார்த்தைகளால் வசைபாடுவது கண்டனத்துக்குரியது. ஆளுநர் தன் பணியைச் சிறப்பாக செய்கிறார். மதச்சார்பற்ற கூட்டணி எனகூறிக் கொண்டு ஹிந்து மதத்தை மட்டும் புண்படுத்தி மற்ற மதங்களை வளர்க்கும் நீங்கள், தி.மு.கவின் நிரந்தர நண்பர்கள் இல்லை. நாளை காலம் மாறலாம்; கூட்டணிகளும் மாறலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.