கேரளா, மலப்புரத்தில் உள்ள பொன்னானி சட்டமன்றத் தொகுதிக்கான கட்சியின் வேட்பாளராக பி. நந்தகுமார் என்பவரை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. அவரை மாற்றக்கோரியும் அவருக்கு பதில் கட்சியின் வேட்பாளராக முஸ்லிமான டி.எம் சித்திக்கை அறிவிக்க வேண்டும் என்றும் அந்த தொகுதியில் முஸ்லிம்கள் ஒரு பேரணி நடத்தினர். ‘கட்சித் தலைவர்களை மாற்றுங்கள். அல்லது மக்கள் கட்சியை மாற்றுவார்கள்’ என்ற கோஷம் இப்பேரணியில் வைக்கப்பட்டது. ஆனால், இப்பேரணியில் இடம்பெற்றவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினரே இல்லை என சி.பி.எம்மின் மலப்புரம் மாவட்ட செயலாளர் இ.என் மோகன்தாஸ் கூறியுள்ளார். முன்னதாக, முஸ்லிம்கள் கட்சிக்குள் ஊடுருவி அவர்களின் திட்ட்த்தை முன்னெடுக்க முயற்சித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ‘எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய்’ என்ற பகவத்கீதையை இந்த நிகழ்வு நினைவுபடுத்துவதாக சொந்த கட்சியினரே புலம்பி வருகின்றனர்.