மக்களவையில், சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (சி.பி.இ.சி) முன்மொழியப்பட்ட விரிவாக்கம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி முரளீதரன், “அந்த அறிக்கைகளை அரசு பார்த்துள்ளது. இந்த நடவடிக்கைகள் பாரதத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை நேரடியாக மீறும் செயல். இத்தகைய நடவடிக்கைகள் இயல்பாகவே சட்டவிரோதமானவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதில் பாரதத்தின் நிலைப்பாடு தெளிவாகவும் நிலையானதாகவும் உள்ளது. அரசு அதற்கேற்ப பாரதம் செயல்படும். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் அவர்களின் நடவடிக்கைகள் இதுகுறித்த கவலைகளை சீனத் தரப்பிற்கும் மத்திய அரசு தெரிவித்துள்ளது, இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இணைப்பு முன்முயற்சிகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விதிமுறைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று பாரதம் உறுதியாக நம்புகிறது. அது திறந்த, வெளிப்படைத்தன்மை மற்றும் நிதிப் பொறுப்பு ஆகியவற்றின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். பிற நாடுகளின் இறையாண்மை, சமத்துவம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கும் வகையில் பின்பற்றப்பட வேண்டும் ” என்று தெரிவித்தார்.