மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நீதிமன்றம் சம்மன்

தடைசெய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் (பி.எப்.ஐ), பஜ்ரங் தள் அமைப்பை இணைத்துப் பேசியது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 100 கோடி ரூபாய் அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் மாநில நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பஜ்ரங் தள் ஹிந்துஸ்தான் என்ற அமைப்பின் நிறுவனர் ஹிந்தேஷ் பரத்வாஜ் என்பவர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், “சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றில், காங்கிரஸ் கட்சி பஜ்ரங் தள் அமைப்பினை பி.எப்.ஐ, சிமி மற்றும் அல் கொய்தா போன்ற தடைசெய்யப்பட்ட சர்வதேச விரோத அமைப்புகளுடன் ஒப்பிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையிலேயே நீதிமன்றம் கார்கேவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.