ஐ.எம்.ஏ தலைவருக்கு நீதிமன்றம் சம்மன்

இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ) தலைவர் டாக்டர் ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால், தனது பதவியையும் அலுவலகத்தையும் கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு பயன்படுத்தியதாகவும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தது சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் (எல்.ஆர்.பி.எஃப்). ஜெயலால் அளித்த இரண்டு நேர்காணல்களில் அவர் கூறிய ‘ஹிந்துக்களை மதமாற்றம் செய்வது குறித்து அவர் பேசிய பேச்சு, தொழுநோய், காலரா மற்றும் பிற தொற்றுநோய் காலங்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட மதமாற்றம், அதேபோல தற்போது கொரோனா காலத்தை பயன்படுத்தி மதமாற்றம் செய்ய அவர் மேற்கொண்ட முயற்சிகள்’ போன்ற பேச்சுக்கள் இதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், டில்லி உயர்நீதிமன்றம், ஜெயலால் மே 31ல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.