இஸ்ரேலிய நிறுவனம் என்.எஸ்.ஓ’வின் பெகாசஸ் உளவு மென்பொருள் தொடர்பான வழக்கின் மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா, நீதிபதி சூர்யா காந்த் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. ஆனால், இதில் மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கில் முந்திரிகொட்டையாக முந்திக்கொண்டு மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, கடந்த ஜூலை 26ல் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி. லோகூர், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மய பட்டாச்சார்யா ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழுவை அமைத்தது.
இதனையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இவ்விவகாரத்தை நாங்கள்தான் விசாரித்து வருகிறோமே, அதற்குள் நீங்கள் ஏன் அவசர அவசரமாக விசாரணை குழுவை அமைத்தீர்கள்? என கேள்வி எழுப்பினர். மேலும், இதில் கட்டுப்பாட்டையும் பொறுமையையும் மமதாவின் அரசு காக்க வேண்டும். தன்னிச்சையாக நீங்கள் நடந்தால் இவ்விவகாரத்தில் நங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என கண்டித்தனர். இதனையடுத்து இவ்வழக்கில் மேற்குவங்க அரசு சார்பில் ஆஜரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, விசாரணையை நாங்கள் உடனே நிறுத்துகிறோம், இப்போதைக்கு நாங்கள் தொடரமாட்டோம் என்று உறுதியளித்தார்.