ஜம்மு காஷ்மீரில், அரசியல் சட்டம் 370, 35A நீக்கத்திற்குப் பிறகு அங்கு பயங்கரவாதிகளின் கொட்டம் அடக்கப்பட்டுள்ளது. சீக்கியர்கள், கூர்க்காக்கள், வால்மீகி சமுதாயத்தினருக்குக் குடியுரிமையும், உள்ளூர் தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஜம்மு பகுதியில் சட்ட விரோதமாகக் குடியேறிய ரோஹிங்கியாக்களை கணக்கெடுக்கும் பணியை அரசு துவங்கியுள்ளது. குடியுரிமை ஆதாரம், அகதிகளுக்கான அடையாள அட்டை எதுவும் இல்லாத ரோஹிங்கியாக்கள் கைது செய்யப்பட்டு முகாமிற்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். உமர் அப்துல்லா, மெஹபூபா போன்றோரது ஆட்சியில் சட்டவிரோதமாகக் குடியமர்த்தப்பட்ட இவர்களை மீண்டும் மியான்மருக்கு திருப்பியனுப்பி விடுவார்கள் என்ற அச்சத்தில் அவர்கள் ஜம்முவிலிருந்து வெளியேறி பிஹார், டெல்லி, மேற்குவங்கம், தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு குடிபெயர அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதால் அவற்றையும் மத்திய அரசு கண்காணிக்கத் துவங்கியுள்ளது. இவர்கள் குடியேறும் எந்த இடத்திற்கும் மிகவும் ஆபத்தானவர்கள் என்பதால் முஸ்லிம் நாடான வங்கதேசமே அங்கு குடியேறிய ரோஹிங்கியாக்களை அப்புறப்படுத்தி ஒரு தீவில் கொண்டுபோய் குடியமர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குடியூரிமைச் சட்டத் திருத்தமும் தேசிய குடிமக்கள் பதிவேடும் தேசத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை இது நமக்கு புலப்படுத்துகிறது.